புதுச்சேரி: கொம்பாக்கம் செங்கழுநீரம்மன்கோவிலில் உள்ள அலர்மேல்மங்கை சமேத வெங்கடாசலபதி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் (பிப்.23)-ல் நடந்தது.
வில்லியனூர் அடுத்துள்ள கொம்பாக்கம் செங்கழுநீர்அம்மன் கோவிலில் அமைந்துள்ள அலர்மேல்மங்கை வேங்கடாசலபதிக்கு திருக்கல்யாண உற்சவம் (பிப்.23)-ல் இரவு 8 மணிக்கு நடந்தது. இதையொட்டி, காலை 10 மணிக்கு மூலவர் சிறப்பு திருமஞ்சனமும், பகல் 12 மணிக்கு தீபாராதனை நடந்தது.
மாலை 6 மணிக்கு ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல், இரவு 7 மணிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு வேங்கடசலபாதி, அலர்மேல் மங்கை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருமண கோலத்தில் வேங்கடசாலபதி, அலர்மேல்மங்கை ஆகியோர்பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் புருஷோத்தம்மன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தி ருந்தனர்.