பதிவு செய்த நாள்
24
பிப்
2018
12:02
புதுச்சேரி: மாசி மகத்திற்கு வரும் செஞ்சி அரங்கநாதர், மைலம் சுப்ரமணியர், தீவனூர் பொய் யாமொழி விநாயகருக்கு புதுச்சேரியில் வரவேற்பு கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.
முத்தியால்பேட்டை வைத்திக்குப்பம் கடற்கரையில், மாசிமகம் திருவிழா, மார்ச் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதில் புதுச்சேரி, தமிழக பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட சுவாமிகள் எழுந்தளி அருள்பாலிக்க உள்ளனர்.
செஞ்சி அரங்கநாதர், மைலம் சுப்ரமணியர், வரும் 28ம் தேதி சாரம் பகுதியில் எழுந்தருள உள் ளனர். இதனையொட்டி சாரம் மாசிமக வரவேற்பு குழு சார்பில், 29வது ஆண்டாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இதேபோல் மாசிமக கடல் தீர்த்தவாரியில் பங்கேற்கும் தீவனூர் பொய்யாமொழி விநாயக ருக்கு 4ம் தேதி 9 மணிக்கு சங்ககு அபிஷேகம், யாகசாலை பூஜைகள், 96 வகை மூலிகை ஷன் னதி ஹோமங்கள் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வருகிறார். ஏற்பாடுகளை 29வது ஆண்டு மாசிமக வரவேற்பு குழு தலைவர் ஆதிகேசவன், செயலாளர் ரவி, பொருளாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.