சென்னிமலை: செல்வ ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. சென்னிமலையில், ஈங்கூர் சாலையில் உள்ள செல்வ ஆஞ்சநேயர் திருக்கோவில், விரிவாக்கம் செய்து கட்டட பணி நிறைவடைந்தது. இங்கு நின்ற கோலத்தில், விஸ்வரூப மகா விஷ்ணு மற்றும் கருடாழ்வார் திருமேனிகள் பஞ்சலோகத்தால் அமைக்கப்பட் டுள்ளது.
கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 23ல் நடந்தது. பாலு சிவாச்சாரியார் தலைமையில், கும்பா பிஷேக விழா (பிப்.25) காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.