பதிவு செய்த நாள்
26
பிப்
2018
03:02
ஊட்டி : பொக்காபுரம் கோவில் திருவிழா களைகட்டியுள்ளது; சுகாதாரம் காக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, மிகப் பிரபலம். கடந்த, 23ம் தேதி துவங்கிய விழா, வரும், 27ம் தேதி வரை நடக்கிறது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லா மல், பிற மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் கூட, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் (பிப்.26) நடக்கிறது. கடந்த, ஜன., மாதம், இக்கோவிலை பார்வையிட்ட உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியிடம், "கோவி ல் விழா சமயத்தில், திரளான பக்தர்கள் வருவதால், கழிப்பிட வசதியை அதிகப்படுத்த வேண் டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே, இங்குள்ள கழிப்பறை வசதி யுடன், கூடுதலாக, சோலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 10 லட்சம் ரூபாய் பொது நிதியில், கழிப்ப றைகள் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டன.
நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜகோபால் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், ""கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுகாதாரம் காக்க வேண்டும். பிளாஸ்டிக் கேரி பை உட்பட பிளாஸ்டிக் வகையறாக்களை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். கோ வில் செயல் அலுவலர் நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோவிலுக்கு செல்லும் வனப்பகுதி நிறைந்த குறுகலான சாலையில், இரு வாகனங்கள் ஒரே சமயத்தில் செல்வது சற்று சிரமம். இதனால், அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதை தவிர்க்க, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், சாலையின் இரு புறங்களி லும் மண் கொட்டப்பட்டு, சாலை சற்றே அகலப்படுத்தப்பட்டுள்ளது; இதன் மூலம் வாகன நெரிசல் தவிர்க்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஊட்டியில் இருந்து பொக்காபுரத்துக்கும், அங்கிருந்து மேட்டுப்பாளையம், கோவை, கூடலூர் உட்பட பல்வேறு இடங்களுக்கு, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.