புதுச்சேரி: கோவில் விழாக்களில் பொதுமக்களுக்கு இடையூறின்றி ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும் என, இந்து அறநிலைத்துறை ஆணையர் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகரம் மற்றும் கிராம புறங்களில் உள்ள கோவில்களில் அதிகாலை பூஜையின் போது பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கியால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இது சம்மந்தமாக இந்து அறநிலைத்துறை, கோவில் அதிகாரிகளுக்கு சுற்றிக்கை மூலம் அறிவுரை வழங்கி உள்ளது. ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு இடையூறு இருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் இது சம்பந்தமாக 2276098 என்ற தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்.