கும்பகோணம்– வலங்கைமான் சாலையில் 9 கி.மீ., தொலைவில் சாக்கோட்டை அமிர்தகலச நாதர் கோயில் உள்ளது. இங்குள்ள அமிர்தவல்லி அம்பாள் ஒரு காலை உயர்த்தி, இன்னொரு காலை தரையில் ஊன்றி, ஒரு கையை தலையில் வைத்து தவம் செய்யும் கோலத்தில் அருள் செய்கிறாள். இவளுக்கு “தபசு அம்மன்” என்றும் பெயருண்டு. முப்பெரும் தெய்வங்கள் கும்பகோணத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன், ஆதி காமாட்சி அம்மன், படவெட்டி மாரியம்மன் கோயில்கள் பிரசித்தமானவை. பெண்கள் இவர்களை, தங்கள் காவல் தெய்வங்களாக கருதுகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோயில்களில் அதிக கூட்டம் இருக்கும்.