நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை விரோத மனப்பான்மையுடன் பார்க்கும் வழக்கம், அவர்களிடம் பணம், பொருள் என கேட்டு நச்சரிக்கும் வழக்கம் பெருகி விட்டது. இதுபற்றி நபிகள் நாயகம், “இறைவனையும், இறுதிநாளையும் நம்பியவர் அண்டை வீட்டாருக்கு சிரமம் தராமல் இருக்கட்டும். தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். நல்லதையே பேசட்டும். இல்லையெனில் மவுனமாக இருக்கட்டும்,” என்கிறார்.