ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்வதை கன்னிகாதானம் என்பர். ஒரு சந்ததியை விருத்தி செய்ய அவள் உதவுகிறாள். அது மட்டுமல்ல, ஒரு ஆண் குழந்தை பெற்றோருக்கு “புத்” என்கிற நரகம் கிடைக்காமல் காப்பாற்றுகிறான். அதனால் தான் அவனை “புத்திரன்” என்பர். ஆனால், ஒரு பெண் குழந்தை தனது தலைமுறை, முந்திய மற்றும் பிந்திய பத்து தலைமுறை, ஆக 21 தலைமுறையினரரை மோட்சம் அடையச் செய்கிறாள். இதனால் தான் குழந்தை பாக்கியம் பெற அனைவரும்ஆசைப்படு கின்றனர்.