பதிவு செய்த நாள்
29
டிச
2011
11:12
சிவகங்கை : சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை ஐயப்பன் கோவிலில் ஜன.,4 முதல் பிரம்மோத்ஸவ உற்சவம் நடைபெற உள்ளது. நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் அருகே தென்சபரி என்றழைக்கப்படும், பதினெட்டு படியுடன் கூடிய ஐயப்பன் கோவில் உள்ளது.
இங்கு, ஜன.,4ம் தேதி கணபதி ஹோமத்துடன் பிரம்மோத்ஸவ விழா துவங்குகிறது. அன்று இரவு ஐயப்பன் சுவாமி புறப்பாடு நடக்கும். ஜன.,13ம் தேதி வரை ஐயப்பனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். விழாவின் 11ம் நாளான ஜன., 14 அன்று காலை கணபதிஹோமம், சாஸ்தா பூஜை, ஆராட்டு விழா, தீபாராதனை நடக்கும். அன்று மாலை 6.10 மணிக்கு 18 படி பூஜை, ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும். விழாவின் ஒவ்வொரு நாள் அன்று இரவு சிறப்பு நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.