பதிவு செய்த நாள்
28
பிப்
2018
01:02
பல்லடம் : பல்லடம் என்.ஜி.ஆர்., ரோடு பொங்காளியம்மன் கோவிலில், பத்தாம் ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழாவை முன்னிட்டு, காலை, 7.00 மணிக்கு, கங்கனம் கட்டுதல் நிகழ்ச்சி, பல்லடம் கோவில்களில் இருந்து தீர்த்தமும் எடுத்து வரப்பட்டது. நேர்த்தி கடன் செலுத்துவதற்காக பக்தர்கள், அலகு குத்தி கோவிலை ஊர்வலமாக வந்து வழிபட்டனர். காலை, 9.00 மணிக்கு கணபதி ஹோமம், சித்தி விநாயகர், பேச்சியம்மன், தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், மற்றும் விசாலாட்சி அம்மனுக்கு விஷேச அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.விழாவில், மதியம் பொங்காளியம்மனுக்கு இளநீர், தேன், பால், சந்தனம் உட்பட, 18 திரவியங்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது.அதன்பின், மலர் மாலைகளால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.