பதிவு செய்த நாள்
28
பிப்
2018
01:02
பிச்சம்பாளையம்: வீரபாண்டி, இனாம்பைரோஜி, பிச்சம்பாளையம் ஏரிக்கரையிலுள்ள கோமுட்டி முனியப்பன் கோவிலில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், நேற்று அதிகாலை வரை, தெவத்திருவிழா நடந்தது. அதில், பிச்சம்பாளையம் மட்டுமின்றி, சானார்பட்டி, மாட்டையாம்பட்டி, அருர், மூலப்பாதை வைரமுனியப்பன் கோவில் பங்காளிகள் என, ஏராளமானோர், தங்கள் குடும்பத்துடன் வந்து, ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏற்பாடுகளை, பூசாரிகள் ராஜா, துரைசாமி, கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.