பழநி, மாசித்திருவிழாவை முன்னிட்டு, பழநி மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. பழநி முருகன் கோயிலைச்சேர்ந்த, மாரியம்மன்கோயிலில் மாசித் திருவிழா பிப்.,9ல் துவங்கி மார்ச் 1 வரை நடக்கிறது. நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு,அம்மன் தேரேற்றம் செய்யப்பட்டு, மாலை 4:30மணிக்கு தேரோட்டம் துவங்கியது.தெற்குரதவீதியில் மேடான பகுதியில் தேரை நகர்த்த யானை கஸ்தூரி உதவியது. மாலை 5:25மணிக்கு தேர்நிலையை வந்து அடைந்தது. இணை ஆணையர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இரவு வண்டிக்கால் பார்த்தலும், திருக்கம்பம் கங்கையில் சேர்க்கப்பட்டது. இன்று மாரியம்மன் நீராடல், இரவு வெள்ளிக்காமதேனு வாகனத்தில் அம்மன் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதன்பின் கொடி இறக்குதலுடன் மாசித்திருவிழா முடிவடையும். தேரோட்டத்தின் போது கிழக்குரதவீதியின் ஆக்கிரமிப்பு கடைகளால் அக்னிச்சட்டி எடுத்த பக்தர்கள் சிரமப்பட்டனர்.