பதிவு செய்த நாள்
01
மார்
2018
02:03
தாங்கி: தாங்கி உற்சவ மண்டபத்தை, தொல்லியல் துறை நிர்வாகம் சீரமைத்து, பாதுகாப்பு வேலி ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் - வாலாஜாபாத் செல்லும், தாங்கி கூட்டு சாலையில், தொல்லியல் துறைக்கு சொந்தமான, உற்சவ மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில், அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் துாண்கள் உள்ளன. இந்த மண்டபத்தை சுற்றிலும், தொல்லியல் துறை அதிகாரிகள், கம்பி வேலி அமைத்து பாதுகாத்தனர். இருப்பினும், கம்பி வேலியை, சில ஆண்டுகளுக்கு முன், சிலர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், மண்டப வளாகத்தில் வேலி காத்தான் மற்றும் பிற செடிகள் புதர் மண்டி இருப்பதால், சமூக விரோத செயல்கள் அரங்கேறும் அபாயம் உள்ளது என, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இந்த செய்தியை தொடர்ந்து, உற்சவ மண்டப வளாகத்தில் இருந்த செடிகளை, தொல்லியல் துறை அதிகாரிகள் அகற்றி, மண்டபத்தை சுற்றிலும் வேலி அமைத்துள்ளனர்.