பவானி: பவானி செல்லியாண்டியம்மன் கோவில் தேரோட்டம், வெகு விமர்சையாக நடந்தது. பவானி நகரின், காவல் தெய்வங்களான, செல்லியாண்டியம்மன்-மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. பின், வன்னிய குல சத்திரிய சமூக கட்டளைதாரர்கள், ஊர்வலமாக சீர்வரிசை கொண்டு வந்தனர். பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், கோவிலை நிலை அடைந்தது.