பதிவு செய்த நாள்
02
மார்
2018
02:03
ஊத்துக்கோட்டை: தாம்பத்ய தட்சணாமூர்த்திக்கு நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது, சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில் வளாகத்தில் உள்ளது தாம்பத்ய தட்சணாமூர்த்தி சன்னதி. இங்கு, தட்சணாமூர்த்தி, தன் மனைவி கவுரியை அணைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று, சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், சந்தன காப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் கொண்டை கடலையில், மாலை செய்து, சுவாமிக்கு அணிவித்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.