மேலுார், மேலுார் அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழாவைமுன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. மாலையில் பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இன்று மதியம் (மார்ச் 2) கோயிலில் கிடா வெட்டி பொங்கல் வைத்ததும் வெள்ளலுார், உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி உள்ளிட்ட 60 கிராமங்களில் கிடா வெட்டிபொங்கல் வைக்கப்படும். இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி, அம்பாள் உலா நடக்கிறது. நாளை தேரோட்டமும், மார்ச் 4ல் மஞ்சள் நீராட்டுடனும் திருவிழா நிறைவு பெறுகிறது.