பதிவு செய்த நாள்
05
மார்
2018
01:03
கன்னிவாடி:தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், மாசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.முன்னதாக அம்மனுக்கு திருமஞ்சன அபிேஷகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன் பவுர்ணமி தீபாராதனை நடந்தது. காளிங்க நர்த்தன கிருஷ்ணர், யோக ஆஞ்சநேயர், போகர், நவக்கிரகங்கள் பரிவார தெய்வங்களுக்கு விசேஷ அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடம், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில் பவுர்ணமி சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.