பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயிலுக்கு புதிய மரத்தேர் ஆயிர வைசிய சமூக நலச்சங்க நிர்வாக ஆயிரவைசிய சபையினரால் செய்யப்பட்டது. இதன் கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து இரவு அம்மன் வெள்ளி குடம், வெள்ளி தேங்காய் மற்றும் கிரீடம் தாங்கி கும்ப வடிவில் அலங்கரிப்பட்டிருந்தார். மாலை 6:30 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன், திருத்தேரில் எழுந்தருளினார். இரவு 7:50 மணிக்கு மேல் புதிய தேர் நிலையை விட்டு புறப்பாடாகி, நான்கு மாட வீதிகளில் வந்தது. இரவு 9:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. மீனாட்சி அம்மன் கோயிலில் அன்னதானம் நடந்தது. இன்னிசைக்கச்சேரி ஆயிர வைசிய சபைத் தலைவர் பாலுச்சாமி தலைமையில் நடந்தது. ஆயிரவைசிய சபை உறுப்பினர்கள், தேவஸ்தான டிரஸ்டிகள் கலந்து கொண்டனர்.