மகாசிவராத்திரியன்று டில்லி, உத்தரபிரதேசம், இமாசலப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள சிவபக்தர்கள் நடந்தே சென்று ஹரித்வார் அருகிலிருந்து கங்கைநீர் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இந்த சிவபக்தர்களை ‘கன்வாரிகள்’ என்று அழைப்பர். இம் மாநிலங்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கன்வாரிகளாக உள்ளனர்.