அமர்கண்ட் என்ற இடத்தில் அமைந்துள்ள நர்மதாதேவி கோயில் மிகப்பிரபலமானது. இந்தக் கோயிலில் யானையின் மீது பாகன் அமர்ந்திருப்பது போல் கலைநயத்தோடு கல்லில் வடிக்கப்பட்டுள்ள சிற்பம் சிறப்புக்குரியது. இந்த யானையின் முன், பின் கால்களுக்கு நடுவேயுள்ள குறுகலான இடைவெளியில் பக்தர்கள் நுழைந்து வெளியே வருகின்றனர். இவ்வாறு நுழையும் பக்தரின் பாவங்கள் அனைத்தும் நர்மதா தேவியின் அருளால் அகன்று விடுமென்று உறுதியாக நம்புகின்றனர்.