கிழக்கு முகம் - லட்சுமி கடாட்சம் ஏற்படும் துன்பம் விலகும், வடகிழக்கு - தானதர்மம் செய்வர், மேற்கு - பகை தீரும், கடன் நீங்கும், தென் கிழக்கு - அறிவு பெருகும், வடக்கு - காரிய சித்தி ஏற்படும், வடமேற்கு - ஒற்றுமை நிலவும். தெற்கு புறமாக விளக்கு ஏற்றக்கூடாது. அன்றாடம் பூஜை அறையில் தரையை சுத்தம் செய்து அரிசிமாவில் கோலமிட்டு செம்புத்தட்டின் மேல் விளக்கினை வைத்து குங்குமம் இட்டு விளக்கேற்றி பூ வைத்து வழிபட வேண்டும். விளக்கினை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி அன்று சுத்தம் செய்யலாம். செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யக்கூடாது. தீபம் சுடராய் இருக்க வேண்டும். பெரிதாகவோ திகுதிகுவென்றோ தீபம் எரியக்கூடாது. தீபத்தை சாந்தி செய்ய பூ, பால் சிறிது பயன்படுத்தலாம். பொதுவாக காலையில் 4.30 -6 மணிக்குள்ளும், மாலையில் 5.30 - 6 மணிக்குள்ளும் விளக்கேற்ற உகந்த நேரங்கள்.