மங்கலம்பேட்டை:மு.பரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் சுதர்சன ேஹாமம் நடந்தது. அதனையொட்டி, காலை 7:30 மணிக்கு சுதர்சன ஹோமம், காலை 10:00 மணியளவில் 108 மூலிகைகள் அடங்கிய தைல காப்பு பூஜை, 10:30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. அதைத்தொடர்ந்து, பகல் 12:00 மணியவளில் பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.