பதிவு செய்த நாள்
07
மார்
2018
12:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில், யோகிராம் கீர்த்தி ஸ்தம்பம் மற்றும் புகைப்பட கண்காட்சியை, முரளீதர சுவாமிகள் திறந்து வைத்தார்.திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில், நுாற்றாண்டு ஜெயந்தி விழா, 2017 நவ., 30ல் துவங்கி, ஓராண்டு முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, நேற்று காலை, செந்தில் கனபாடிகள் தலைமையில், 12க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள், வேதமந்திரம் முழங்க கோ பூஜை நடத்தப்பட்டு, பூர்ணாஹதி நடந்தது.பகவான் சன்னதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. முரளீதர சுவாமிகள், யோகி ராம்சுரத்குமார் நுாற்றாண்டு கீர்த்தி ஸ்தம்பம் திறப்பு விழா மற்றும் யோகிராம் புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்தார்.பின், ஆசிரம நிர்வாகிகளான டாக்டர் ராமநாதன் எழுதிய, அருள்மழை அனுபவங்கள் என்ற புத்தகமும், மாதேவகி எழுதிய, டிவைன் ஹெட்டர் என்ற புத்தகமும் வெளியிடப்பட்டன. தொடர்ந்து, உபன்யாசம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.