சென்னையை அடுத்த மறைமலை நகரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கச்சூரில் ஊருக்கு நடுவில் விருந்திட்ட நாதர் கோயில் இருக்கிறது. ஒருசமயம் இதன் அருகே மலைமீதுள்ள மருந்தீஸ்வரரை வழிபடுவதற்காக சுந்தரமூர்த்தி நாயனார் வந்தார். அப்போது அவருக்கு பசி அதிகமானது. சுந்தரமூர்த்தி நாயனாரின் பசியைப் போக்கும் வகையில் இறைவனே வீடு வீடாகச் சென்று உணவைப் பெற்று வந்து சுந்தரருக்கு விருந்து படைத்தார். அதன் காரணமாகவே இறைவனுக்கு விருந்திட்ட நாதர் என்று பெயர்.