பதிவு செய்த நாள்
10
மார்
2018
02:03
சென்னை: பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில், நேற்று கரை ஒதுங்கிய, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சிலையை, போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை அருகே உள்ள, ஒடைகுப்பம் பகுதியில், நேற்று காலை, 9:30 மணியளவில், மூன்று அடி உயர, பெண் சிலை ஒன்று கரை ஒதுங்கியது. இதைக்கண்ட, அப்பகுதி மக்கள், சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சிலையை மீட்டு, சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போலீசார் கூறுகையில், சிலையின் வடிவமைப்பை பார்க்கும் போது, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது போல் தெரிகிறது. இது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு தகவல் கொடுத்துள்ளோம் என்றனர்.