பதிவு செய்த நாள்
02
ஜன
2012
11:01
நாகப்பட்டினம்:ஜெருசலம் செல்ல, கிறிஸ்தவர்களுக்கு மானியம் வழங்கி, உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு, இந்திய கத்தோலிக்க திருச்சபை நன்றி தெரிவித்துள்ளது. வேளாங்கண்ணியில் தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் நிருபர்களிடம் கூறியதாவது:கிறிஸ்தவ தேவாலயங்களுக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த பெருமை, "பசிலிக்கா என்ற பேராலயத் தகுதிக்கு உயர்த்தப்படுவது. கீழ்த்திசையின் லூர்து என்ற சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி, ஆரோக்கியமாதா தேவாலயத்திற்கு,ரோம் நகரில் திருத்தந்தை 23ம் அருளப்பரால், 1962ம் ஆண்டு "பசிலிக்கா அந்தஸ்து அளிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயம் பசிலிக்கா சிறப்பு பெற்று, 50 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு,தேவாலயம் சார்பில் சர்வ,சமய, நல்லிணக்க விழாக்கள் மற்றும் இலவச திருமணங்கள்,எளியோருக்கு உதவிகள் நடக்க உள்ளன.தேர்தல் வாக்குறுதியில் கூறியப்படி தமிழக முதல்வர், ஜெருசலம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு மானிய உதவி கிடைக்கும் என்றும் முதற்கட்டமாக, 500 @பருக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்திய கத்தோலிக்க திருச்சபை சார்பில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு, தேவதாஸ் அம்புரோஸ் கூறினார்.