Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கெமிக்கல் இல்லாத விபூதிக்காக பழனி ... கொல்லங்குடி காளியம்மன் பங்குனி விழா: மார்ச் 23ல் துவக்கம் கொல்லங்குடி காளியம்மன் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

13 மார்
2018
10:03

புதுக்கோட்டை:பு துக்கோட்டை அருகே, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில், மாசித் திருவிழாவையொட்டி, தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில், பிப்ரவரி மாதம் 25ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. மார்ச், 4ம் தேதி, கொடியேற்றத்துடன் மாசிப்பெருந்திருவிழா தொடங்கியது.விழா துவக்க நாளில், திருவப்பூர் குலாலர் தெரு திடலிலிருந்து புரவி எடுத்துச் சென்று சிறப்பு அபிஷேகம், வழிபாடு செய்தனர். தொடர்ந்து, திருக்கோகர்ணேசர் உடனுறை பிரஹதாம்பாள் கோவிலில் உற்சவ மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அங்கிருந்து ஊர்வலமாக சென்று, திருவப்பூர் கோவிலை அடைந்த அம்மனுக்கு, காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது.இதையடுத்து, ஒவ்வொரு நாளும் அன்னவாகனம், ரிஷப வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், முத்துபல்லக்கு போன்றவற்றில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று, மாசித்திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும், அக்கின குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கவிநாடு கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் கோலாட்டம் நடனம் ஆடினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar