பதிவு செய்த நாள்
15
மார்
2018
12:03
பவானி: நசியனூரில் உள்ள, மூவேந்திர ஈஸ்வரர் கோவிலில், 400 ஆண்டுகள் பழமையான கற்தூண்கள் மாயமாகி உள்ளதாக, புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், நசியனூரில் மூவேந்திர ஈஸ்வரர் மற்றும் ஆதிநாராயண பெருமாள் கோவில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமையானது. மூவேந்திர ஈஸ்வரர் கோவிலிலுள்ள, 16 கால் மண்டபம் மிகவும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த, கற்தூண்களை கொண்டது. இதில், போத்திகை கற்கள், உத்திரகற்கள், பாவுகற்கள் மற்றும் ஒரு முருகன் சிலை ஆகியவை இருந்தன. அவை கடந்த, 2012ம் ஆண்டுக்கு முன்னதாக எடுக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய கற்கள் மற்றும் முருகன் சிலை அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக, கோவிலின் பாதுகாப்பு சங்க நிர்வாகி தூத்துக்குடியை சேர்ந்த பாலசுப்ரமணி, நேற்று சித்தோடு போலீசாரிடம் புகார் அளித்தார். சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.