நிலக்கோட்டை;நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் நடந்தது. இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் திருவிழா பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். வரும்25ல் திருவிழா துவங்குகிறது. கடந்த 4ல் சாமி சாட்டப்பட்டு, மார்ச் 16 மாலையில் பூச்சொரிதல் நடந்தது. பெண்கள் மேளதாளத்துடன் பூ தட்டுக்களுடன்ஊர்வலம் சென்றனர். பூக்கள் காணிக்கையாக செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். நாடார் உறவின்முறை சார்பில் அன்னதானம்நடந்தது. நேற்று முன் தினம் இரவில் கொடியேற்றம் நடந்தது. சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவிழா ஏற்பாடுகளை உறவின்முறை தலைவர் சுசீந்திரன்,நிர்வாகிகள் பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலைப்பாண்டியன் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.