பதிவு செய்த நாள்
20
மார்
2018
12:03
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தி ஆற்றின் கரையோரம் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம், 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்கள், சூர்ய பூஜை நடக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில், 27ம் தேதி முதல் நாளில், மூலவர் சுவாமியின் திருப்பாதம் மீதும், 28ம் தேதி இரண்டாம் நாளில், சுவாமியின் திருமேனி மீதும், 29ம் தேதி மூன்றாம் நாளில், சுவாமியின் சிரசு மீதும், சூர்ய ஒளிக்கதிர்கள் விழும். அப்போது, மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்நிகழ்ச்சியில், ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், முருகப் பெருமானை வழிபடுவர்.