பதிவு செய்த நாள்
20
மார்
2018
01:03
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது. மாநகரில் பிரசித்தி பெற்ற, ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்கள், குண்டம் தேர்த்திருவிழா, இன்றிரவு பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. வரும், 24ல் இரவு, 10:00 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 28ல் கிராமசாந்தி, 29ல் கொடியேற்றம், ஏப்.,3ல், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் தீ மிதித்த நடக்கிறது. ஏப்.,4ல் காலை, பொங்கல் வைபவம், 9:30 மணிக்கு சின்னமாரியம்மன் கோவிலில் தேர் வடம் பிடித்தல், ஏப்.,6ல் இரவு நிலை சேர்தல் நடக்கிறது. ஏப்.,7ல் மதியம் கம்பம் ஊர்வலமாக கொண்டு சென்று காவிரியில் விடப்படும். ஏப்.,8 ல் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.