பதிவு செய்த நாள்
20
மார்
2018
01:03
பரமக்குடி:பரமக்குடி அருகே எஸ்.அண்டக்குடி ஊராட்சி ராம்நகரில் சித்திவிநாயகர்கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. முன்னதாக மார்ச் 18 அன்று மாலை 6:00மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி நிறைவடைந்து,முதல் கால யாகபூஜை துவங்கியது. அன்று இரவு 9:30 மணிக்கு நவரத்னஸ்தாபனம், விக்ரஹ பிரதிஷ்டை, மருந்து சாற்றப்பட்டது. நேற்று காலை 6:30 க்கு இரண்டாம் கால யாகபூஜை, மகாபூர்ணாகுதிகள்நிறைவடைந்து, கடம் புறப்பாடாகியது. பின்னர் 10:00 மணிக்கு மேல்வேத, மந்திரம் முழங்க, கருடன் வானில் வட்டமிட்ட பின், மகா அபிேஷகம்நடந்தது. தொடர்ந்து விநாயகர் அபிேஷகம், தீபாராதனை நடந்து,பிரசாதம் வழங்கப்பட்டது.