ஈஞ்சம்பாக்கம்: காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் செல்வ விநாயகர் கோவில், மஹா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில், பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, புனரமைப்பு பணிகள் நடந்ததை அடுத்து, கும்பாபிஷேகம் நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சில நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 9:30 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின், அன்னதானமும் நடந்தது.