பதிவு செய்த நாள்
21
மார்
2018
01:03
மோகனூர்: மோகனூர் அடுத்த, ஒருவந்தூரில், தேவேந்திரகுலத்தெருவில், பெரியகாண்டியம்மன், காமாட்சியம்மன், மாசி பெரியசாமி கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கு, விழாக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். வரும், 29 மாலை, 3:00 மணிக்கு, காவிரியாற்றிலிருந்து, தீர்த்தம் எடுத்து வருதலுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, 6:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை, யாகசாலை பிரவேசம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 30 காலை, 6:00 மணிக்கு, வேதிகார்ச்சனை நடக்கிறது. 7:30 மணிக்கு, பெரியகாண்டியம்மன், காமாட்சியம்மன், மாசி பெரியசாமி, வீரமலையாண்டி, மதுரைவீரன், காத்தவராயன், பொன்னர்-சங்கர், தங்காயி அம்மன் மற்றும் இதர தெய்வங்களுக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது.