அவிநாசி : அவிநாசியை அடுத்த, குட்டகம் அத்தனுார் அம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில், பங்குனி மாத, முதல் சோமவாரம் முன்னிட்டு, சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.சோமவாரத்தை முன் னிட்டு அம்மனுக்கு பால், தயிர், வெண்ணெய், தேன் பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபராதனை, உற்சவர் திருவீதியுலா நடந்தது.