பெரியகுளம் கோயிலில் பங்குனி உத்திர தேர்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2018 12:03
பெரியகுளம், அறநிலையத்துறைக்கு உட்பட்ட பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், பங்குனி உத்திர தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகன், வள்ளி, தெய்வானை, சிவன், அறம் வளர்த்த நாயகி, நந்தி உட்பட தெய்வங்களுக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. திருப்பணிக்குழு தலைவர் சசிதரன், செயலர் சிதம்பரசூரியவேலு, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தினமும் உற்சவர்கள் வீதி உலா நடக்கிறது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் மார்ச் 29ல் நடக்கிறது.