மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் சிவன்புரம் ஆசிரியர் காலனியில், ராஜஅஷ்ட விமோஷன கணபதி கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாத கிருத்திகையையொட்டி பாலமுருகன் சுவாமிக்கு, சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. தாமரை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட முருகன் கடவுளை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.