Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை தமிழிசை மூவர் விழா ... திருவண்ணாமலை கோவில் யானைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில், கோவில் நிலத்தில் கட்டட பணி... நிறுத்தம்! மீறினால், நடவடிக்கை எடுக்க முடிவு
எழுத்தின் அளவு:
திருப்பூரில், கோவில் நிலத்தில் கட்டட பணி... நிறுத்தம்! மீறினால், நடவடிக்கை எடுக்க முடிவு

பதிவு செய்த நாள்

24 மார்
2018
11:03

திருப்பூர் : திருப்பூரில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், நீதிமன்ற தடையை மீறி, கட்டட பணிகள் நடந்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம், திருவேங்கடம் நகர் பகுதியில், நல்லூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான, 45 ஏக்கர் நிலம் உள்ளது.இதில், சர்வே எண், 165ல், 9.24 ஏக்கர் நிலம் உள்ளது. நிலத்தை பலர் ஆக்கிரமித்து வீடு கட்டிய நிலையில், அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், வழக்கு முடி யும் வரை, உள்ளது, உள்ளபடி இருக்க வேண்டும் எனவும், புதிய கட்டுமானங்கள் மேற்கொள் ளக்கூடாது எனவும், கோர்ட் தடை உத்தரவு உள்ளது. இருப்பினும், கோர்ட் உத்தரவை மீறி, பலர் கட்டடம் கட்டி வருகின்றனர். இதையறிந்த அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஹர் சினி மற்றும் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று, புதிய கட்டடங்கள் கட்டக்கூடாது, என கூறினர்.

பொதுமக்கள் தரப்பில், வழக்கு நடந்து வரும் நிலையில், கோர்ட் உத்தரவையும் மீறி, ஏழு பேர் புதிதாக கட்டியுள்ளனர். எம். எல்.ஏ., உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கோவில் நிலத்தில் கட்டடம் கட்டியுள்ளனர். இது விஷயத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும், என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையறிந்த திருப்பூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதுருன்னிசா தலைமையில் வந்தபோலீசார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, கோர்ட் உத்தரவின்படி நடந்து கொள்ள வேண்டும், என அறிவுறுத்தினர். அதன்பின், கோவில் சார்பில், கோவிலுக்கு சொந்தமான நிலம். நீதிமன்ற உத்தரவுபடி, கட்டடங்கள் கட்டக்கூடாது, என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar