பதிவு செய்த நாள்
26
மார்
2018
12:03
திருப்பூர்: திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், ஸ்ரீராமநவமி விழா, நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூர் சபாபதிபுரம் ஸத்ய பிரமோத தீர்த்த வித்யா பீடம், அவிநாசி ஸ்ரீகரிவரதராஜ பெருமாள், வீர ஆஞ்சநேயர் கோவில், சேவூர் ஸ்ரீகல்யாணவெங்கட்ரமண பெருமாள் கோவில்களில், கோவில்வழி பெரும்பண்ணை கரிவரதராஜ பெருமாள் கோவில், கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் உள்ளிட்ட இடங்களில், ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, காலை 8:00 மணிக்கு, மங்கள இசையுடன் பூஜைகள் துவங்கின, காலை, 9:00 மணிக்கு, சிறப்பு அபிேஷகம், சுந்தரகாண்ட பாராயணத்தை தொடர்ந்து, புஷ்ப அலங்கார பூஜைகள் நடந்தன. மகாதீபாராதனையை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.