பதிவு செய்த நாள்
26
மார்
2018
12:03
விருதுநகர் : விருதுநகரில் துாய இன்னாசியார் ஆலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ் , துணைபாதிரியார் ஜான்பால் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் நகராட்சி அலுவலகம், ரயில்வே மேம்பாலம், அருப்புக்கோட்டை சாலை, எம்.ஜி.ஆர்., சிலை வழி சென்றது. அதனை தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடந்தது. பாண்டியன் நகர் துாய சவேரியர் ஆலயத்தில் பாதிரியார் ஆரோக்கியசெல்வம், எஸ்.எப்.எஸ். மேல்நிலைப் பள்ளி முதல்வர் அருள் பிரான்சிஸ் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது. திருப்பலி, மறையுரை நடந்தன.விருதுநகர் நிறைவு வாழ்வு ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பாதிரியார் தாமஸ் வெனிஸ் தலைமையில, ஆர்.ஆர். நகர் துாய வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் பர்ணபாஸ் தலைமையில் குருத்தோலை ஊர்வலம், திருப்பலி நடந்தன.
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் ஐக்கிய குருத்தோலை பவனி நடந்தது. சி.எஸ்.ஐ. பாதிரியார் கமலேசன் மற்றும் ஆர்.சி. பாதிரியார் அந்தோணிராஜ், உதவி பாதிரியார் தேவசகாயம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. பின்னர் திருஇருதய பெண்கள் பள்ளியிலிருந்து துவங்கிய ஊர்வலத்தில், கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக சர்ச் சென்றனர்.