சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் ராமநவமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சங்கராபுரம் அடுத்த காட்டு வனஞ்சூர் ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை ராமர், சீதை, லஷ்மணர், ஆஞ்சநேய சுவாமிகளுக்கு பால்,தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனைக்குபின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. ஏற்பாடுகளை வெங்கடேச பாகவதர், சீனுவாசய்யர், அன்பழகன், பழமலை ஆகியோர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் சங்கராபுரம் அடுத்த தியாகராசபுரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, 10 நாட்கள் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் இரவில் பாகவத கோஷ்டிகளின் அஷ்டபதி,திவ்யநாம பஜனை நடக்கிறது. 10ம் நாளன்று ஸ்ரீசீதா கல்யாண வைபவம் நடக்கிறது.ஏற்பாடுகளை விசுவனாத கனபாடிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.