பதிவு செய்த நாள்
27
மார்
2018
01:03
கோவை:பெரியநாயக்கன்பாளையம் அருகே காட்டு மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, இன்று மாலை குண்டம் திறக்கப் படுகிறது. கோவில் குண்டம் திருவிழா, மார்ச் 9ல் துவங்கியது. 20ம் தேதி திருவிழா கம்பம் நடப்பட்டது. இன்று மாலை, 6:00 மணிக்கு, குண்டம் திறத்தலும், நள்ளிரவு, 12:00 மணிக்கு, சக்தி கரகம் அழைத்தலும் நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு, சக்தி கரகம் கோவிலை அடைந்தவுடன், பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காலை, 7:00 மணிக்கு, அம்மனுக்கு அலங்கார பூஜையும், 9:00 மணிக்கு, பொங்கல் வழிபாடும், மதியம், 2:00 மணிக்கு, அக்கினி கும்பம் எடுத்தலும், மாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு எடுத்தல் மற்றும் பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தலும் நடக்கிறது. 29ம் தேதி காலை, 8:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, வசந்த விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.