பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் பிரம்மோற்சவத்தன்று, கரிவரதராஜ பெருமாள் அன்னவாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியநாயக்கன்பாளையம் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் மாலை, 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளுகிறார். நேற்று முன்தினம், கோவிலில் இருந்து அன்னவாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய, கரிவரதராஜ பெருமாள், முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள், பக்தி பாடல்கள் பாடி பெருமாளை வழிபட்டனர். பிரம்மோற்சவ விழா ஏப்., 3 வரை தொடர்ந்து நடக்கிறது.