சென்னை மயிலாப்பூரில் வசித்த சிவநேசர், தன் மகள் பூம்பாவையை ஞானசம்பந்தருக்கு மணம் செய்து கொடுக்க விரும்பினார். அச்சமயத்தில் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளுக்கு இறுதி காரியங்களை செய்து முடித்தார் சிவநேசர். இதையறிந்த சம்பந்தர், பூம்பாவையின் எரித்த சாம்பலை கொண்டு வரச் செய்தார். “பலி விழாப் பாடல் செய் பங்குனி யுத்திர நாள், ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய்” என்ற தேவார பாடலை பாடினார். “பங்குனி உத்திரத் திருநாளில் சிவனின் திருக்கல்யாணம் நடக்குமே! அதைக் காணாமலே போகிறாயே பூம்பாவாய்!” என்பது இதன் பொருள்.. சிவனருளால் “சாம்பல்” உயிர் பெற்று பெண்ணாக எழுந்தாள்.