முருகனுக்கு வாகனம் மயில் என்றாலும், மாமனான திருமால் கொடுத்த யானை, சேவல் மற்றும் ஆடு ஆகியவையும் வாகனங்களாக உள்ளன. திருப்பரங்குன்றம் மூலவர் முருகனின் பாதத்திற்கு அருகில் இவற்றை தரிசிக்கலாம். இங்கு நடக்கும் பங்குனி பிரம்மோற்ஸவத்தில் சுப்பிரமணியர் இந்த வாகனங்களில் எழுந்தரு ளுகிறார்.