முனிவர்களின் யாகத்திற்கு இடையூறு செய்து வந்தாள், அரக்கி மகிஷி. அவளை வதம் செய்ய சிவனையும், விஷ்ணுவையும் முனிவர்கள் வேண்டினர். இதன் காரணமாக விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து சிவனோடு இணைய, பங்குனி உத்திர நன்னாளில் சாஸ்தா அவதரித்தார். அவரால் மகிஷி கொல்லப்பட்டாள். வனப்பகுதிகளில் சாஸ்தா கோயில்கள் இருக்கும். இங்கு செல்ல அஞ்சிய மக்கள், கூட்டமாக சென்று வழிபட்டனர். “சாத்து” என்ற சொல்லுக்கு “கூட்டம்” என பொருள். இதனால் “சாத்தா, சாஸ்தா, சாத்தப்பன், சாஸ்தான்” எனவும் பெயர் பெற்றார்.