சிவகங்கையில் 4 ஆண்டுக்கு பின் நாளை பங்குனி உத்திர தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2018 12:03
சிவகங்கை: சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர தேரோட்டம் நான்கு ஆண்டுகளுக்கு பின், நாளை (மார்ச் 29) நடக்கிறது. இன்று (மார்ச் 28) திருக்கல்யாணம் நடக்கிறது. சிவகங்கை விஸ்வநாதசுவாமி கோயில் சுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் விமர்சியாக நடக்கிறது. ஒன்பது நாள் தேரோட்டம் நடக்கும். கும்பாபிேஷகத்திற்காக கோயில் திருப்பணி நடந்தது. இதனால் 2013 க்கு பின் தேரோட்டம் நடக்கவில்லை. ஜன., 22 ல் கும்பாபிேஷகம் முடிந்தநிலையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடக்கிறது. இதற்காக தேர் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. நேற்று காலை 9:00 மணிக்கு மண்டகப்படி மற்றும் இரவு 8:30 மணிக்கு ஆட்டு கடா வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தன. இன்று மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 9:00 புஷ்ப பல்லக்கு நடக்கும். சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.