பதிவு செய்த நாள்
28
மார்
2018
01:03
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள, 800 ஆண்டுகள் பழமையான, காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இதே போல, வேலூர் அடுத்த, விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில், பிரம்மோற்சவ விழாவின், ஏழாவது நாளான நேற்று காலை, தேரோட்டம் நடந்தது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், அணைக்கட்டு எம்.எல்.ஏ., நந்தகுமார் உள்பட ஆயிரக்கணக்கானோர், தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.