பதிவு செய்த நாள்
29
மார்
2018
11:03
திருப்பூர் : திருப்பர், கரட்டாங்காடு, ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில், பொங்கல் விழா நடந்தது. திருப்பூர், தாராபுரம் ரோடு, கரட்டாங்காடு சித்தி விநாயகர் கோவில், ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில், பொங்கல் விழா உற்சவம், கடந்த, 20ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
தினமும் மாலை, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம், கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, கும்பம் சேவித்து, ஊர்வலமாக கோவில் வந்தடைந்தது. இரவு, படைக்கலம் அழைப்பு, அம்மன் அழைப்பு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.நேற்று காலை, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது; ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனர். மாகாளியம்மன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, பூவோடு ஊர்வலமும், இரவு கும்பம் கங்கைக்கு புறப்படுதல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் இன்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள், மஞ்சள் நீர் உற்சவம் மற்றும் அன்னதானம் நடக்கிறது. மாலையில், சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.