பதிவு செய்த நாள்
29
மார்
2018
12:03
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், சுவாமி தரிசனம் உள்பட பல்வேறு பூஜைகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், வரலாற்று சிறப்பு மிக்க தலமாக, சென்னிமலை முருகன் கோவில் உள்ளது.
திருவிழா மட்டுமின்றி, செவ்வாய்க் கிழமை தோறும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். நேற்று முன்தினம் முதல், கோவிலில் சுவாமி தரிசன கட்டணம் மற்றும் பல்வேறு பூஜைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மலை கோவிலுக்கு செல்ல, இரு சக்கர வாகனங்களுக்கு, ஐந்து ரூபாயாக இருந்தது, 10 ரூபாயாகவும், காரில் செல்ல, 15 ரூபாயாக இருந்தது, 20 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளியல் கட்டணம், இரண்டு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய், அர்ச்சனை சீட்டு மூன்று ரூபாயில் இருந்து ஐந்து, பால், தயிர் அபி?ஷகம் செய்ய, ஐந்திலிருந்து, 25 ரூபாய், சிரசு பூ உத்தரவு கேட்டல், 10லிருந்து, 25 ரூபாய், இருசக்கர வாகனத்துக்கு பூஜை செய்ய, 10 லிருந்து, 20, நான்கு சக்கர வாகனம், 10லிருந்து, 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. வேங்கை மர ரத உலா கட்டணம், 700 லிருந்து, 1,000 ரூபாய், கோவில் வளாகத்தில் திருமணம் செய்ய கட்டணம், 500லிருந்து, 1,000 ரூபாய், திருமணத்தின் போது புகைப்படம் எடுக்க, 150லிருந்து, 200, வீடியோ எடுக்க, 300லிருந்து, 500 ரூபாய் என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கோ-பூஜையில் கலந்து கொள்ள, 100 ரூபாய், ஐந்து நேரங்களில் நடக்கும் கால பூஜைகளில் சுவாமி தரிசனம் செய்ய, 100 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர்.